Thanks Meet of Singer S.P.Balasubrahmanyam Sir Event Stills

377
0
SHARE

Thanks Meet of Singer S.P.Balasubrahmanyam Sir Event Stills

இசைத்துறையில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட 15 இந்திய மொழிகளில் பிண்ணனி பாடகராக 50 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார் பாடகர் பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

15 இந்திய மொழிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45 படங்களுக்கும் மேல் நடிகனாகவும் தன்னை நிரூபித்துள்ளார். இசையமைப்பாளராக 45 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி பல்வேறு நடிகர்களுக்கு நூற்றுக்கணக்கான படங்களுக்கு பிண்ணனி குரல் (டப்பிங்) கொடுத்துள்ளார். 25 முறை ஆந்திர மாநில அரசு விருது, 3 முறை தமிழக அரசின் விருது, 3 முறை கர்நாடக அரசின் விருது, கலைமாமணி விருது, கேரள அரசால் வழங்கப்படும் ஹரிவராசனம் விருது என எஸ்.பி.பி பெற்ற விருதுகள் ஏராளம்.

7 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்வர், ஈடிவியின் ‘பாடுதா தீயகா’ நிகழ்ச்சியை 19 வருடங்களாக வெற்றிகரமாக வழங்கி வருகிறார். இசை நிகழ்ச்சிகள் மூலமாக பல நல்ல காரியங்களுக்கு நிதி திரட்டியுள்ளார். தற்போது எஸ்.பி.பியின் ரசிகர்கள் அவர் பெயரிலேயே அறக்கட்டளையை நடத்தி வருகின்றார்கள்.

ரஷ்யாவின் க்ரெம்லின் மாளிகையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் எஸ்.பி.பி. பாடகராக திரையுலகில் 50 வருடங்களைப் பூர்த்தி செய்ததை குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.பி.பி அவர்கள் இசையுலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் எஸ்.பி. சரண் நடத்தும் கேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ் பல்வேறு தேசங்களில் ‘எஸ்பிபி 50’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்த தீர்மானித்துள்ளது. இதில், பாடகர்கள் சித்ரா, சைலஜா, கார்த்தி, விஜய் பிரகாஷ், ஹரிசரண் உள்ளிட்டவர்களும், சரத்குமார், ராதிகா, மீனா, நிரோஷா, ராம்கி, பிரியாமணி உள்ளிட்ட நடிகர்களும் கலந்துகொள்கின்றனர்

NO COMMENTS

LEAVE A REPLY